பரங்கிப்பேட்டை : ஊராட்சி ஒன்றிய ஓவர்சீயரை தாக்கிய ஊராட்சி தலைவர் கோர்ட்டில் சரணடைந்தார். புவனகிரி ஊராட்சி ஒன்றியத்தில் ஓவர்சீயராக இருப்பவர் வீரமனோகரன். இவர் கடந்த 8ம் தேதி பணியில் இருக்கும்போது அகர ஆலம்பாடி ஊராட்சி மன்றத் தலைவரான சங்கர் நூறு நாள் வேலை திட்டத்தில் கணக்கெடுத்தது சம்மந்தமாக கேட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது வீரமனோகரனை, சங்கர் தாக்கினார். இதுகுறித்து வீரமனோகர் கொடுத்த புகாரின்பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து ஊராட்சி தலைவர் சங்கரை தேடிவந்தனர். நேற்று ஊராட்சி தலைவர் சங்கர் பரங்கிப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தார்.
Source: Dinamalar

No comments:
Post a Comment