அதிமுகவுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் செயல்படுவதாக தமிழக முதல்வர் கருணாநிதியின் மகனும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் ஆட்சி மாற்றம் தேவை என பேசி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரசாயானத் துறை அமைச்சர் மு.க.அழகிரி தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப் பட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் நடுநிலை மீறி ஆட்சி மாற்றம் தேவை என்று பொது இடங்களில் பேசி வருவதாக குற்றம் சாட்டினார். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி திமுக ஒன்றியச் செயலாளர் துரையின் மனைவி ரூபலட்சுமி தன கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் காவல்துறையினர் அத்துமீறி சோதனை நடத்தியதாகவும் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் ரூபலட்சுமி புகார் தெரிவித்துள்ளார்.source: http://www.inneram.com/2011032915013/alagiri-alleged-madurai-collector-supports-aiadmk
No comments:
Post a Comment