Islamic Widget

March 30, 2011

தேர்தலில் போட்டியிடாத ம.தி.மு.க.,விற்கு திடீர் மவுசு :ஆதரவை பெற வேட்பாளர்கள் போட்டா போட்டி

கடலூர் : தேர்தல் புறக்கணிப்பில் உள்ள ம.தி.மு.க., வினரின் ஆதரவை பெற்றிட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் முயன்று வருவதால் ம.தி.மு.க., தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.தி.மு.க., தற்போதைய தேர்தலில் உரிய அளவிற்கு தொகுதி ஒதுக்கீடு செய்யாததால் கூட்டணியில் இருந்து வெளியேறியது.
மேலும், இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும், அதேநேரத்தில் தேர்தல் அன்று தொண்டர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை உணர்ந்து அவரவர் விருப்பத்திற்கேற்ப ஓட்டு போடுவார்கள் என அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்தார். சென்னை பொதுக்குழு தீர்மானத்தை தொண்டர்களுக்கு விளக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் ம.தி.மு.க., நிர்வாகிகள் நகர, ஒன்றிய அளவில் கூட்டங்கள் நடத்தினர். அதில், பொதுக்குழுவில் நடந்த விவாதங்கள் மற்றும் தீர்மானம் குறித்து ஆலோசித்தனர். இந்த தேர்தல் தி.மு.க., - அ.தி.மு.க.,- காங்., வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுவதில்லை. அந்தந்த தொகுதி நிலவரத்திற்கு ஏற்ப தொண்டர்கள் அனைவரும் ஓட்டு போட வலியுறுத்தினர். தேர்தல் களத்தில் பம்பரமாக சுழலும் ம.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கட்சி தலைமையின் முடிவை ஏற்று தங்களது சொந்த வேலைகளை கவனித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் களத்தில் கடும் போட்டியை சந்தித்து வரும் தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ம.தி.மு.க.,வினரின் ஆதரவை பெற்றிட பல்வேறு வகையிலும் முயற்சித்து வருகின்றனர். அதில், நீண்டகாலமாக கூட்டணியில் இருந்த உங்களுக்கு குறைந்த அளவில் தொகுதி ஒதுக்கீடு செய்து அவமானப்படுத்திய ஜெ.,விற்கு பாடம் புகட்டிட எங்கள் அணியை ஆதரியுங்கள் என தி.மு.க., வினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதேப்போன்று அ.தி.மு.க.,வினர், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் ஆட்சிக்கும், கருணாநிதியின் குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் உங்கள் லட்சியம். அது நிறைவேற வேண்டுமானால் எங்கள் அணியை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேர்தலில் போட்டியிடா விட்டாலும், தற்போது தேர்தல் களத்தில் உள்ள பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் மாறி, மாறி வந்து ஆதரவு கேட்டு வருவது ம.தி.மு.க.,வினரை உற்சாகமடையச் செய்துள்ளது.

source:dinamalar

No comments:

Post a Comment