Islamic Widget

March 30, 2011

இதஜ முயற்சியால் இறக்கும் தருவாயில் இஸ்லாத்திற்குள் நுழைந்த சகோதரர்!

வாரந்தோறும் அரசு மருத்துவனைகளுக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறுவதோடு அவர்களை நலம் விசாரித்து அவர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைப்பதை தங்களின் அடிப்படை பணியாக INTJ செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான சகோதரர்கள் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் கொள்வதோடு, தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டும் வருகின்றனர்.
கடந்த வாரம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று தஃவா பணியில் எடுபட்ட மதுக்கூர் மைதீன் தலைமையிலான குழுவினர் ஆதரவற்றுக் கிடந்த ஒரு சகோதரருக்கு இஸ்லாத்தை எடுத்து சொன்ன போது இந்த நிலையில் இறந்தால் எனக்கு இறைவன் மன்னிப்பளிப்பானா ? என்று கேட்டார்.மன்னிப்போடு மகத்தான சொர்க்கமும் கிட்டும் என சொன்ன போது 'அப்படியானால் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறேன்' என்றார். (அல்ஹம்துலில்லாஹ்) உடனே அவருக்கு கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்றார். இறுதியில் ஒரு மனிதருக்கும் நரகத்திற்கும் இடையில் ஒரு முழம்தான் இடைவெளி இருக்கும், நரகம் அவரை முந்திக் கொள்ளும், ஒரு மனிதருக்கும் சொர்க்கத்திற்கும் இடையில் ஒரு முழம்தான் இடைவெளி இருக்கும், சொர்க்கம் அவரை முந்திக் கொள்ளும் என்ற நபிமொழிப்படி இவரை சொர்க்கம் முந்திக் கொண்டது.இறக்கும் தருவாயில் இருக்கும் இச்சகோதரருக்காக அவருக்காக நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக!

-செங்கிஸ்கான்.

1 comment: