கடலூர் : கடலூருக்கு நாளை துணை முதல்வர் வருகையையொட்டி நெடுஞ்சாலை துறை திடீர் சுறுசுறுப்படைந்துள்ளது. துணை முதல்வர் ஸ்டாலின் நாளை (13ம் தேதி) மாலை 4 மணிக்கு கடலூர் வருகிறார். கடலூர் அடுத்த ராமாபுரம் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தை திறந்து வைத்து பின்னர் எம்.புதூரில் நடைபெறும் அரசு விழாவில் அரசு மருத்துவக் கல்லூரி, கடலூர், காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடம், வேப்பூர், புவனகிரி, மங்களம்பேட்டை ஆரம்ப சுகாதர நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும், கடலூர் தாலுகா அலுவலகம், பெண்கள் தொழிற் பயிற்சி நிலைய புதிய கட்டடங்கள், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் குடியிருப்பு உள்ளிட்ட கட்டடங்களை திறந்து வைத்து, சுய உதவிக்குழு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார். விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் நெடுஞ்சாலை துறையினர், துணை முதல்வர் செல்லும் வழியான வண்டிப்பாளையம் சாலை, கடலூர் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் "போஸ்ட் ஆபீஸ்' பஸ் நிறுத்தம் அருகே பாதாள சாக்கடை திட்ட பணிக்காக தோண்டிய பள்ளத்தை அவசரமாக மூடி, கான்கிரீட் கலவை கொண்டு சரி செய்யும் பணி.அண்ணா பாலத்தில் குவிந்திருந்த மண்ணை அகற்றி பெயிண்ட் அடிக்கும் பணி என இரவு, பகலாக செ#து வருகின்றனர்.
Source: Dinamalar

No comments:
Post a Comment