நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதற்கு தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம், ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த பூமணி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், எங்களுக்கு சொந்தமாக திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் உள்ளன.
அவற்றில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்வதற்கு வருவாய் கோட்டாட்சியர், காவல்துறையினர் குறுக்கிடுகின்றனர்.எங்கள் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை திருப்பூர், பல்லடம் பகுதிக்கு கொண்டு செல்கிறோம். எனவே தண்ணீரை கொண்டு செல்வதில் தலையிட அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி ஆணையம் தரப்பில் தங்களையும் இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். ஆனால் இதை தனி நீதிபதி ஏற்கவில்லை. மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.அந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் ஆகியோர் விசாரித்து அளித்த உத்தரவில், தமிழ்நாடு நிலத்தடி நீர்மேம்பாடு, நிர்வாகச் சட்டத்தின் (2003) அடிப்படையில் அரசிடம் இருந்து சில விளக்கங்களை பலமுறை நீதிமன்றம் கேட்டது.
கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு அரசு பிளீடர், பொதுப்பணித்துறை செயலாளரின் கடிதம் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வேளாண்மையை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டும் நிலத்தடி நீர்மேம்பாடு, நிர்வாக சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வருவதாக கூறப்பட்டு இருந்தது.2003ஆம் ஆண்டில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. 3 ஆண்டுகள் முடிந்தும் அதை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளை அரசு மேற்கொள்ளவில்லை. இதற்கு என்ன காரணம் என்பதும் தெரியவில்லை. உயர் நீதிமன்றம் 2 முறை உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த சட்டத்தை அறிவிப்பாணையாக வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பிய பிறகும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை.எனவே விவசாயிகளுக்காக, வர்த்தக நோக்கம் உள்ளவர்களிடம் இருந்து நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காக உத்தரவு பிறப்பிக்கிறோம். அதன்படி இந்த சட்டம் சம்பந்தமான அறிவிப்பாணை வெளியிடப்படும் வரை, நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதற்கு யாரையும் அரசு அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

No comments:
Post a Comment