டெல்லி: எகிப்தில் வெடித்துள்ள மக்கள் போராட்டம் காரணமாக பெட்ரோல் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.எகிப்து நாட்டில் அதிபர் முபாரக்குக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் மற்றும் சில அரபு நாடுகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெயின் விலை கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலை உயருமா? என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், "எகிப்தில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தியிலும், அது கிடைப்பதிலும் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. சூழ்நிலையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. விலைவாசி உயர்வின் பாதிப்பை அரசு கவனத்தில் கொள்ளும்," என்றார்

No comments:
Post a Comment