Islamic Widget

February 10, 2011

மீண்டும் ஒரு தீவிரவாத நாடகம் தோல்வியை தழுவியது

புதுடெல்லி,பிப்.10:போலி என்கவுண்டர் கதையை உருவாக்கி டெல்லி போலீசார் தீவிரவாதிகளாக சித்தரித்த ஏழு முஸ்லிம்களை விடுதலைச்செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.மோதல் கதையும், இதர குற்றச்சாட்டுகளும் போலீஸ் நிலையத்தில் வைத்து தயாராகியுள்ளது ('carefully scripted in office'.) என நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
ஸாகிப் ரஹ்மான், பஷீர் அஹ்மத் ஷா, நஸீர் அஹ்மத் ஸோஃபி, ஹஸி குலாம் முஈனுத்தீன் தர், அப்துல் மஜீத் பட், அப்துல் கய்யூம் கான், பிரேந்தர் குமார் சிங் ஆகியோர் நிரபராதிகள் என கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி விரேந்தர் பட் தீர்ப்பளித்தார்.அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த நான்கு போலீஸ்காரர்களுக்கெதிராக விசாரணை நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க போலீஸ் கமிஷனருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இச்சம்பவம் போலீஸ் துறைக்கு வெட்கக்கேடு எனவும், போலீஸார் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிட இந்த போலி என்கவுண்டர் கதைகள் காரணமாகும் எனவும் நீதிமன்றம் விமர்சித்தது. இத்தகைய வீழ்ச்சிகளை எளிதாக கருதிவிடக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்தது.2005-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி ஸாகிப் ரஹ்மான், பஷீர் அஹ்மத் ஷா, நஸீர் அஹ்மத் ஸோஃபி, ஹஸி குலாம் முஈனுத்தீன் ஆகிய நான்கு பேருடன் சண்டையிட்டு கைதுச் செய்ததாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.காரில் செல்லும் பொழுது இவர்கள் போலீசாரின் சோதனைக்கு வண்டியை நிறுத்தாமல் வேகமாக தப்பித்து சென்றதாகவும், போலீசார் பின்தொடர்ந்து சென்று துப்பாக்கியால் சுட்டு பின்னர் அவர்களுடன் சண்டையிட்டு கைதுச் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.கைதுச் செய்யப்பட்ட இவர்களிடமிருந்து ராணுவ உடைகள், கையால் வீசும் கிரேனேடுகள், சீன தயாரிப்பான ஒரே ரவுண்டில் பதினெட்டுமுறை சுடும் பிஸ்டல், 38 ஏ.கே.47, லிவ் கேட்ரிட்ஜஸ், 50 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் மற்றும் விமானப்படையின் பாலம் ஸ்டேசனின் வரைப்படம் ஆகியவற்றை கைப்பற்றியதாகவும், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் உத்தரவின்படி இவர்கள் செயல்பட்டார்கள் எனவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தன.இவர்கள் நான்கு பேரையும் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் இதர மூன்று பேரையும் கைதுச் செய்ததாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.



செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments:

Post a Comment