Islamic Widget

February 10, 2011

அயோத்தி வழக்கின் தீர்ப்பு மே 31 வரை நீடிக்கும் - அலகாபாத் உயர்நீதிமன்றம்

அலகாபாத்,பிப்.10:அலகாபாத் உயர்நீதிமன்றம் அயோத்தி வழக்கில் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு மே 31 வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.அயோத்தியில் உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் 30-ல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதே நிலை மே 31 வரை நீடிக்கும் என இப்போது தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு உள்ளூர் வழக்கறிஞர் எம்.இஸ்மாயில் பரூக்கி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 3 மறு ஆய்வு மனுக்களை பரிசீலித்த நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், வி.கே.தீட்சித் ஆகியோர் இந்தத் தீர்ப்பை அளித்தனர்.முன்னதாக இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு பிப்ரவரி 15-ம் தேதி வரை நீடிக்கும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.கடந்த செப்டம்பர் 30-ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது மேல் முறையீடு செய்ய 3 மாத கால அவகாசம் அளித்தது. அதுவரையில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக்கூடாது என தெரிவித்திருந்தது.
ராஜேந்திர சிங், நிர்மோகி அகரா, பகவான் ராம் லாலா விராஜ்மான் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை ஆய்வு செய்யவேண்டும் என்று பரூக்கி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பரப்பை மூன்று சம பகுதிகளாகப் பிரித்து ஹிந்துக்கள், முஸ்லிம்கள், அங்குள்ள சாதுக்களுக்கு பிரித்து அளிக்க உத்தரவிட்டது.இப்போது ராமர் ஆலயம் உள்ள பகுதியை ஹிந்துக்களிடம் அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்டப்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக முழு பெஞ்ச் ஏப்ரல் 28-ல் கூடும்.

No comments:

Post a Comment