கடலூர் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரியை ஆழப்படுத்தி அதிக தண்ணீரை தேக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே கொள் ளிடக் கரையை பலப்படுத்த அரசு சுமார் ரூ.108? கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
அதன் மூலம் வீராணம் ஏரி, பொன்னேரி, நாரைக் கால் ஏரி ஆகிய ஏரிகளில் தூர் வாரி அந்த மண்ணை கொண்டு கொள்ளிடக் கரையை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று கருணா கரநல்லூர் பகுதியில் வீராணம் ஏரியில் தூர் வாரும் பணி தீவிரமாக நடந்தது.பொக்லைன், டிப்பர் லாரி உதவியுடன் மண் அள்ளப்பட்டது. இந்த பணிக்கு வசதியாக கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment