சிதம்பரம் : ரவுடி கார் விபத்தில் இறந்ததையொட்டி, அவரது ஆதரவாளர்களால் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சிதம்பரம் அண்ணாமலை நகர் மண்ரோடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சந்திரன் (32). பிரபல ரவுடி. வன்னியர் சங்க மாவட்ட பொறுப்பில் இருந்தார். நேற்று முன்தினம் தருமபுரி அடுத்த தீர்த்தமலை அருகே கார் விபத்தில் பலியானார்.
அவரது ஆதரவாளர்கள் சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டை அருகே இரண்டு அர” பஸ் மற்றும் ஒரு தனியார் பஸ், ஆம்னி வேன், எஸ்.பி., கோவில் தெருவில் ஒரு தனியார் பஸ், டாக்டருக்கு சொந்தமான கார் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கினர். பதட்டம் நிலவியதால் சிதம்பரம், அண்ணாமலை நகர் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
டி.எஸ்.பி.,க்கள் மோகன், குப்புசாமி தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வி.ஐ.பி.,க்கள் அஞ்சலி: ரவுடி சந்திரன் உடலுக்கு மரியாதை செலுத்த கர்நாடகா, கேரளா, புதுச்சேரி பதிவு எண் கொண்ட வாகனங்கள் மற்றும் பா.ம.க., - தி.மு.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., - காங்., என அரசியல் கட்சி பிரமுகர்கள் வந்திருந்தனர். ஒரு சில அரசியல்வாதிகள் கார்களில் கட்சிக் கொடி அகற்றப்பட்டிருந்தது. அங்கு வந்த அனைத்து வி.ஐ.பி., க்களின் கார் கண்ணாடிகள் மூடப்பட்ட நிலையில் இருந்தன. இருந்தும் உளவுத்துறை போலீசார் யார், யார் எங்கிருந்து வந்தனர் போன்ற விவரங்களை சேகரித்ததோடு மட்டுமின்றி, வாகனங்களை வீடியோவிலும் பதிவு செய்தனர்.

No comments:
Post a Comment