காளஹஸ்தி சிவன் கோயில் அருகே உள்ள சுவர்ணமுகி ஆற்றில் சந்த மைதானம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் நேற்று மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றின் கரையோரத்தில் தங்க நாணயம் ஒன்று கிடப்பதை பார்த்தனர். அந்த இடத்தில் மேலும் தங்கநாணயங்கள் இருக்கலாம் என்று கருதி குழி தோண்டினர். ஒரு சிறிய மூட்டையில் தங்க நாணயங்கள் புதைக்கப்பட்டிருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மூட்டையை வெளியே எடுத்து பார்த்தபோது, அதில் 2,148 தங்க நாணயங்கள் இருந்தது. உடனே அவர்கள் அந்த நாணயங்களை விற்க முடிவு செய்தனர். இதையடுத்து காளஹஸ்தியில் உள்ள ஒரு அடகுக்கடைக்கு சென்றனர். அடகு கடை உரிமையாளர் சங்கரய்யா, நாணயங்களை வாங்கி பார்த்தபோது, அதில் 1891ல் விக்டோரியா மகாராணி காலத்தில் தயாரிக்கப்பட்டதற்கான முத்திரை இருந்தது. நாணயங்களின் மொத்த எடை 3 கிலோ 481 கிராம். உடனே சங்கரய்யா அவர்களிடம் தங்க நாணயங்கள் எப்படி கிடைத்தது? என்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து, காளஹஸ்தி ஆர்.ஐ. முனிரத்தினத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த ஆர்.ஐ., முனிரத்தினம், மீனவர்களை சப்இன்ஸ்பெக்டர் சுப்பாரெடியிடம் ஒப்படைத்தார். தங்க நாணயங்கள் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

No comments:
Post a Comment