மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கைநாகப்பட்டினத்தைச் சேர்ந்த 106 மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்திருப்பதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. தொடர்ந்து பலவகையிலும் தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.
உயிர்களைப் பறிகொடுத்தல், உடைமைகளை இழத்தல் என துன்பங்களை சந்தித்துவரும் நமது மீனவர்கள் இப்போது கடலுக்குச் சென்று மீன்பிடிக்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.வங்கக்கட-ன் மீன் வளங்களை, தங்களுக்கு மட்டுமே சொந்தமாக்கும் நோக்கத்தோடு, தமிழக மீனவர்களை அச்சுறுத்தி ஒருவகை மிரட்டல் போக்கை இலங்கை அரசு செய்து வருகிறது.இவ்விவகாரத்தில் இந்திய நடுவண் அரசு, இந்தியாவின் உரிமைகளை அடகு வைக்கும் விதமாக கண்துடைப்பு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது.அந்த தைரியத்தில்தான் இலங்கை ராணுவம் 106 தமிழக மீனவர்களைக் கைது செய்யும் அளவுக்கு துணிச்சல் பெற்றிருக்கிறது.கைது செய்யப்பட்டவர்களை 48 மணி நேரத்திற்குள் விடுதலை செய்திடவும், அவர்களது உடைமைகளை சேதமின்றி திருப்பிக் கொடுக்கவும் மத்திய-மாநில அரசுகள் உடனே நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.
நன்றி:tmmk.in

No comments:
Post a Comment