Islamic Widget

January 04, 2011

தரமற்ற சாலை போட்டால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

கடலூர் : வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் வரும் 31ம் தேதிக்குள் போர்க்கால அடிப்படையில் பணிகளை முடிக்க கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், மற்றும் சிறப்பு திட்டத்தில் புதுப்பிக்கப்படும் சாலைகளை விரைந்து முடிப்பதற்காக ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் 7 கோடி ரூபாய் மதிப்பில் 116 சாலைகளும், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பில் 145 சாலைகளும், பொதுப்பணித் துறை (நீர்வள ஆதாரம்) சார்பில் 4.32 கோடி ரூபாய் மதிப்பில் 412 பணிகளும், நகராட்சி சார்பில் 76 சாலைகள் 1.50 கோடி மதிப்பிலும் மொத்தம் 17.80 கோடி மதிப்பில் சாலைகள் போட டெண்டர் விடப்பட்டுள்ளது.அதன்படி வரும் 10ம் தேதிமுதல் பணிகள் துவங்கி 20ம் தேதிக்குள் சாலைபோட கற்கள் கொட்டி இருக்க வேண்டும். அனைத்து சாலைகளும் வரும் 31.1.2011ம் தேதிக்குள் தரமான சாலையாக போட்டு முடிக்கப்பட வேண்டும். அவ்வாறு சாலை தரமாக இல்லாத பட்சத்தில் ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

 
Source:dinamalar

No comments:

Post a Comment