Islamic Widget

January 09, 2011

தமிழக சட்டசபை தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை-தேர்தல் ஆணையம்

Quereshi
தமிழக சட்டசபை தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுப்போம் மூலம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரோஷி கூறினார்.
தலைமை தேர்தல் ஆணையத்தின் வைர விழா வரும் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,தலைமை தேர்தல் ஆணையம் 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு தனது 60வது ஆண்டு வைர விழாவை ஆணையம் கொண்டாடுகிறது.அன்றைய தினம் 'வாக்காளர் தினமாக' கொண்டாடப்படும். இந்த வைர விழா ஆண்டில் வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பிய 8 லட்சம் இளைஞர்கள் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.வரும் தேர்தலில் வாக்காளர்கள் அதிகளவில் தேர்தலில் பங்கேற்கும் வகையில் நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும். புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டதைத் தொடர்ந்து நகர்ப் பகுதி மக்களிடையே வாக்களிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.தேர்தல்கள் நேர்மையாவும், நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த தேர்தல் சமயத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுப்போம் என்றார்

1 comment:

  1. vote podumbodhu panam kodupadhu namadhu oorilum nadandhu varugiradhu.Idhai naam thaduka vendum.

    ReplyDelete