சிதம்பரம் : சிதம்பரம் தாலுகா பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு கொடுத்தவர்கள் அட்டை பெற்றுக் கொள்ளலாம் என தாசில்தார் அறிவித்துள்ளார். இதுகுறித்து தாசில்தார் காமராஜ் கூறுகையில், "சிதம்பரம் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த ஜூலை மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மனு கொடுத்தனர்.
அந்த மனுக்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கிராம பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வி.ஏ.ஓ.,க்கள் மூலமாகவும், நகராட்சியில் நகராட்சி அலுவலர்கள் மூலமாகவும் வழங்கப்படுகிறது. எனவே வாக்காளர்கள் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார்.
Source:dinamalar
No comments:
Post a Comment