கடலூர் : கடலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களின் நெம்பர் பிளேட்டு களில் "போலீஸ்', "பிரஸ்' என ஸ்டிக்கர் ஓட்டிய 75க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஓட்டுனர் உரிமம் மற்றும் ஆர்.சி., புக் இல்லாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் தங்கள் வாகனங்களின் நெம்பர் பிளேட்டுகளில் போலீஸ், நீதித்துறை, மின் வாரியம் என ஸ்டிக்கர் ஒட்டி வாகன சோதனையில் இருந்து தப்பித்து வந்தனர். குறிப்பாக போலீஸ், பிரஸ் என ஏராளமானோர் தங்கள் வாகனங்களில் எழுதி வைத்துள்ளனர். இவ்வாறு இயக்கப்படும் வாகனங்களை பிடிக்க எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் கடலூர் சரகத்தில் 4, சிதம்பரம் 4, விருத்தாசலம் 3, நெய்வேலி 4, சேத்தியாத்தோப்பு 3, பண்ருட்டி 7, திட்டக்குடி 3 என மொத்தம் 28 இடங்களில் அந்தந்த பகுதி டி.எஸ்.பி., க்கள் தலைமையில் போலீசார் நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தொடர்பே இல்லாத பலர் போலீஸ், பிரஸ், அரசுதுறைகளின் பெயர்களை எழுதியிருப்பது தெரியவந்தது. குறிப்பாக பெண் போலீசாரின் கணவர், சகோதரர்கள், சகோதரிகள், உறவினர் என பலரும் அதிகளவில் தங்கள் வாகனங்களில் "போலீஸ்' என ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு தொடர்பு இல்லாமல் ஒட்டியிருந்த 75க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.Source:dinamalar
No comments:
Post a Comment