அரசு தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும், தேர்ச்சி பெறுவதற்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தால் 9ம் ஆண்டாக இளையான்குடி ஹமிதியா உயர்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. இளையான்குடி மற்றும் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் நலன் கருதி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மிகச் சிறப்பாக பாடம் நடத்தினார்கள்.
மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் குறிப்புகள் எடுத்துக் கொண்டனர். இம்முகாமை இளையான்குடி காவல் ஆய்வாளர் திரு.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்கள். ஹமிதியா உயர்நிலைப்பள்ளியின் தாளாளர் திரு.முகம்மது சிக்கந்தர் அவர்களும், தலைமை ஆசிரியர் திரு.பெரியசாமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தமுமுக-வின் நகர தலைவர் கபார்கான், நகரச் செயலாளர் உமர், நகர பொருளாளர் செய்யது மஹபூப், மனிதநேய மக்கள் கட்சியின் நகரச் செயலாளர் ஜெயினுல் ஆபிதின், சோதுகுடி ஜலால், சாத்தனி சிராஜ், கஸ்ஸாலி, ஹக்கீம், சீனி முகம்மது, ரவி சிறப்பாக செய்திருந்தனர்.
சுமார் 1500 மாணவ, மாணவிகள் பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment