Islamic Widget

January 12, 2011

சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு - 10 லட்சம் பரிசு!

சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் இருவர் குறித்தத் தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூபாய் பத்து லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு குழு அறிவித்துள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி டெல்லியில் இருந்து லாகூர் புறப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் பானிபட் அருகே சென்று கொண்டிருந்தபோது தீவிரவாதிகள் வைத்த குண்டு பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இக்கோர சம்பவத்தில் 68 பேர் அநியாயமாக பலியாகினர்.
ஆரம்பத்தில் இக்குண்டுவெடிப்பை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ லஷ்கரே தொய்பா மூலம் நடத்தியதாக கூறப்பட்டது. வழக்கில் முஸ்லிம் இளைஞர்கள் பலர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் தொடர்பு வெளிப்பட்டதைத் தொடர்ந்து ஹைதராபாத், கோவா, அஜ்மீர் என பல குண்டுவெடிப்புகளையும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளே நடத்தியிருப்பது அம்பலமாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்தவர்களே நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்த வழக்கில் தொடர்புடைய அசீமானந்த் என்பவனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தபோது, சந்தீப் டாங்கே, ராமசந்திரா ஆகிய இரண்டு பேர் முக்கிய குற்றவாளிகள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. "தலைமறைவாக இருக்கும் இந்த 2 தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும்" என தேசிய புலனாய்வு ஏஜன்சி (என்.ஐ.ஏ.) அறிவித்துள்ளது. அதேபோன்று, "மூன்றாவது குற்றவாளியான தீவிரவாதி அசோக்கைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு அளிக்கப்படும்" என்றும் என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.

 
source: inneram

No comments:

Post a Comment