2007ஆம் ஆண்டு 9 பேரை பலிவாங்கிய ஹைதராபாத் மக்கா மசூதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பை விசாரணை செய்து வரும் சிபிஐ விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று தகவல்கள் கூறுகின்றன.
2007ஆம் ஆண்டு அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் குற்றவாளிகளாக ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையால் குற்றம் சாட்டப்பட்டுள்ள தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா ஆகியோருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
2007ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி வெள்ளிக் கிழமையன்று ஹைதராபாத்தில் உள்ள மக்கா மசூதியில் முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற மோதல்களைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டனர்.
Source:.inneram
No comments:
Post a Comment