
இதனால் மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. இந்நிலையில் கல்வித்துறை அரையாண்டு தேர்வை கடந்த 9ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை முடிக்க ஏற்கனவே திட்டமிட்டு கேள்வித்தாள் தயார் செய்தது. இந்த கேள்வித்தாள்கள் குறிப்பாக 9, 10ம் வகுப்புகளுக்கு புத்தகம் முழுவதும் முடிக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். ஆனால் பள்ளிகள் எதிர்பாராமல் விடுமுறை விடப்பட்டதால் பாடங்கள் முழுவதையும் ஆசிரியர்களால் நடத்தி முடிக்க முடியவில்லை. சிறப்பு வகுப்பும் நடத்தவும் முடியாத நிலையில் உள்ளனர். பாடங்களை முடிக்காமல் தேர்வு நடத்த முடியாது என்பதால் தலைமையாசிரியர்கள் தேர்வை ஒத்தி வைக்க முதன்மைக்கல்வி அதிகாரியிடம் வலியுறுத்தினர். பள்ளிகள் வேலை நாட்கள் குறைந்த பட்சம் 200 முதல் 202 நாட்கள் இருக்க வேண்டும் என்பதால் வரும் 20ம் தேதி தேர்வு துவங்கி 31ம் தேதி வரை நடத்தி முடித்த விடலாம் என அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் வழக்கத்தைவிட 10 நாட்கள் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று முதன்மை கல்வி அதிகாரி அமுதவல்லி கூறினார்.
Source:dinamalar photos: pno.news
No comments:
Post a Comment