பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே விஷ வண்டுகளை அழிக்க தீயணைப்பு படையினர் தயக்கம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிதம்பரம் - கடலூர் தேசியநெடுஞ்சாலையில் இருந்து பெரியகுமட்டி கிராமம் செல்லும் வழியில் பனைமரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியுள்ளது. அந்த வழியாக வரும் பொதுமக்கள், பள்ளி மாணவர்களை விஷ வண்டுகள் விரட்டி சென்று கடித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெரியகுமட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, காசிராஜன், தட்சணாமூர்த்தி விஷ வண்டுகளால் தாக்கப்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால் மக்கள் அவ்வழியே செல்ல அஞ்சுகின்றனர். பெரியகுமட்டி கிராம மக்கள் பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு நேரடியாக சென்று புகார் தெரிவித்தும் தீயணைப்பு படையினர் விஷ வண்டுகளை அழிக்க வரவில்லை என குற்றச் சாட்டை எழுப்பியுள்ளனர். பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கடலூர் தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Source: Dinamalar
November 09, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- சவூதி: மனைவியை அடித்தவருக்கு நூதன தண்டனை
- சவூதி இளவரசர் நாஇஃப்-பின்-அப்துல் அஸீஸ் மரணம்!
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- திண்ணை குழுமத்தின் சார்பாக விழிப்புனர்வு
- இறப்புச் செய்தி
- பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
No comments:
Post a Comment