கடலூர் : கடலூரில் போலி பத்திரம் தயார் செய்து டிரஸ்ட்டுக்கு சொந்தமான காலி மனைவியை குறைந்த விலைக்கு விற்பனை செய்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடலூர் புதுப்பாளையம் ராமதாஸ் நாயுடு தெருவைச் சேர்ந்தவர் சந்திரன்(49).
வண்ணாரப்பாளையத்தைச்சேர்ந்தவர் பிரபாகரன்(52). இவர்கள் இவரும் கிருஷ்ணமூர்த்தி முதலியார் டிரஸ்ட்டின் உறுப் பினர்கள். மேலும் இந்த டிரஸ்ட்டில் மொத்தம் 20 உறுப்பிரன்கள் உள்ளனர். இதில் பிரபாகரனிடம் டிரஸ்ட் சொத்துக்களுக்கான "பவர்' கொடுக்கப் பட்டிருந்தது. அதை பயன்படுத்தி பிரபாகரன் புதுப்பாளையம் ராமதாஸ் நாயுடு தெருவில் உள்ள 2650 சதுரஅடி காலிமனைக்கு போலி பத்திரம் தயார் செய்துள்ளார். பின்னர் இந்த இடத்தை வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி உமா மகேஸ்வரிக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளார். இது குறித்து சந்திரன் கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் (2)ல் புகார் செய்தார். விசாரணை செய்த மாஜிஸ்திரேட்டு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் பிரபாகரன் மீது மோடி செய்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Source: Dinamalar
No comments:
Post a Comment