Islamic Widget

October 24, 2010

நிலவில் போதுமான அளவு தண்ணீர்! நாசா அறிவிப்பு

சென்ற ஆண்டு நிலவை குறித்த ஆய்வை அமெரிக்காவின் “நாசா” விண்வெளி விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அப்போது நிலவில் மேற்பரப்பில் 5 சதவீதம் அளவுக்கு ஐஸ்கட்டி படிவங்கள் இருப்பதாக கண்டுபிடித்தனர். அதை வைத்து நிலவில் தண்ணீர் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.



இந்த ஆய்வின் பலனாக நிலவின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகளில், ஒரு டன் பாறையில் இருந்து சுமார் 13 காலன்கள் அளவு தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது என கண்டறிந்துள்ளனர். அந்த தண்ணீரை சுத்திகரித்தால் குடிநீராக பயன்படுத்த முடியும் எனவும் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், அந்த தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாக பிரித்து ராக்கெட்டுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்தலாம். இந்த தண்ணீரை செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வுக்கு செல்லும் விண்வெளி வீரர்களும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் நிலவில் போதிய அளவு குடிநீர் உள்ளது நிரூபணமாகியுள்ளது என நாசாவில் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Source: inneram.com

No comments:

Post a Comment