Islamic Widget

October 24, 2010

ஆன்-லைன் மூலம் தொலை தூரக்கல்வி அண்ணாமலைப் பல்கலை துணைவேந்தர் தகவல்

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூரக்கல்வியை ஆன்-லைன் மூலம் பாடத்தை துவங்க திட்டமிட்டுள்ளது என்று துணைவேந்தர் ராமநாதன் கூறினார்.


அவர் கூறியதாவது: தொலை தூரக்கல்வி இயக்ககம் 361 டிகிரி மைண்ட் நிறுவனத்துடன் சேர்ந்து மேலாண்மை மாணவர்களுக்கு முழுமையான கல்வித் தரத்துடன் எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ., ஹூயூமன் ரீசார்ஸ் மேனேஜ் மென்ட் பாடங்களில் ஆன்-லைன் மூலம் தொடங்க திட்டமிடப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 361 டிகிரி மைண்ட் நிறுவனம் பாடங்களை எதிர்கால நிகழ்விற்கு ஏற்ப ரிசர்ச் அண்ட் டெக்னாலஜி முறையில் பாடங்கள் அமைக்கிறது.
இக்கல்வி நிறுவனத்தின் கல்வி அமைப்பு அரசாங்க நிர்வாக அமைப்பு சார்ந்த மேலாண்மை கல்வியை உலகளாவிய கோட்பாடுகளுடன் அறிவியல் தொழில் நுட்படத்துடன் திறம்பட தயாரித்து பாடங்களை நடத்துகிறது. இந்தப் பாடங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐந்து நாடுகளைச் சேர்ந்த 20 வகையான குடியுரிமை பெற்ற மாணவர்கள் படித்து மிகப்பெரிய அளவில் பயனடைந்துள் ளனர். இவ்வாறு துணைவேந்தர் ராமநாதன் கூறினார்.
361 டிகிரி மைண்ட் நிறுவன இணை தோற்றுனர் சி.பி.கோபிநாதன் கூறுகையில், "ஆன்-லைன் என்பது தயக்கமின்றி செயல்படுத்தும் முற்போக்கு பாதையாகும். இது வெகு விரைவில், எதிர்பார்ப்பு முன்னரே நடைபெறுவதாகும். இது பெரும் விஞ்ஞான ரீதியாக மட்டுமின்றி தகுதி வாய்ந்த பிரத்யோகமாக கையாள்வதாகும்' என்றார்.
பதிவாளர் ரத்தினசபாபதி, தொலை தூரக்கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ், 361 டிகிரி மைண்ட் நிறுவன அமைப்பின் இணை தோற்றுனர்கள் ராம்மோகன், ரீட்டா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 
Source:  Dinamalar

No comments:

Post a Comment