Islamic Widget

October 29, 2012

சட்டப்பேரவை முற்றுகை-அணு உலை எதிர்ப்பாளர்கள் கைது!

 கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற பல்வேறு கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி வலியுறுத்தியும் அணு உலைக்கு எதிராக போராடுவோருக்கு ஆதரவளித்தும் தமிழக சட்டப்பேரவையை முற்றுகையிட பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தது.
இதில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அந்தந்த கட்சியின் தொண்டர்கள், பழநெடுமாறன், வைகோ, திருமாவளவன், ஜவஹிருல்லா தலைமையில் இன்று சட்டப்பேரவையை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

இந்நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே வந்தபோது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்

No comments:

Post a Comment