Islamic Widget

October 07, 2010

ராமருக்கு கோவில் கட்டும் வரை என் மனம் அமைதி அடையாது-அத்வானி


LK Advani
ஜெய்ப்பூர்: ராமருக்கு அயோத்தியில் கோவில் கட்ட வேண்டும் என்பது எனது மனதின் ஆசை. ராமர் கோவில் கட்டப்படும் வரை எனது மனம் அமைதி அடையாது என்று கூறியுள்ளார் மூத்த பாஜக தலைவர் அத்வானி.

ஜெய்ப்பூரில் நடந்த தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது எனது மனதில் உள்ள ஆசை. எனவே ராமர் கோவில் கட்டும்வரை எனது மனது அமைதி அடையாது.

ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக அக்டோபர் மாதம் 25-ந்தேதி நான் சோமநாதபுரத்தில் இருந்து ரத யாத்திரை தொடங்கினேன். ஆனால் அந்த யாத்திரை முடிவு பெறவில்லை.

நான் இங்கு அக்டோபர் 25ம் தேதிதான் வருவதாக இருந்தது. ஆனால் எனது அயோத்தி யாத்திரை முடிவடையாததால், நான் அக்டோபர் 25ம் தேதி வேறு எங்கும் செல்வதில்லை. சோமநாதபுரம் கோவிலுக்கு மட்டுமே செல்வது வழக்கம்.

தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டு வருவது பற்றி பாரதீய ஜனதா பல கருத்துக்களை நிர்ணயித்து உள்ளது. பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேணடும் என்பது எங்களின் விருப்பம் ஆகும். இதை முதன் முதலில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவாத்தான் எடுத்து வைத்தார்.

குஜராத்தில் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்கி இருக்கிறார்கள். இதே போல அனைத்து தேர்தல்களிலும் ஓட்டுப்போடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக குஜராத் சட்டசபையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளனர். ஆனால் மசோதாவை அனுமதிக்காமல் இன்னும் நிலுவையில் வைத்திருக்கிறார் மாநில ஆளுநர். விரைவில் இதற்கு அனுமதி கிடைக்கும் என நம்புகிறேன்.

தேர்தல் முறையில் தொடர்ந்து மாற்றங்களை செய்தால்தான் ஜனநாயகம் வலுவாக இருக்க முடியும். தேர்தலில் பண பலம் ஆதிக்கம் செலுத்துவதை தடுத்தாக வேண்டும். இங்கிலாந்தில் 18 மற்றும் 19-வது நூற்றாண்டில் தேர்தல்களில் முறைகேடு இருந்ததை அதை வெற்றிகரமாக தடுத்து இருக்கிறார்கள். அதே போல இங்கேயும் செய்ய வேண்டும். ஊழல் நீடித்தால் அனைத்து தரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். இதை தடுத்தே ஆக
வேண்டும் என்றார் அத்வானி.

முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Source: thatstamil

No comments:

Post a Comment