Islamic Widget

October 28, 2010

ஷார்ஜாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி

ஷார்ஜா,அக்.28:ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி (http://www.sharjahbookfair.com/) ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நேற்று துவங்கியது. இது அடுத்த மாதம் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.



இந்த புத்தகக் கண்காட்சியை நேற்று காலை 10 மணி அளவில் ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி திறந்து வைத்தார். இதனை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இக்கண்காட்சியில் உலகெங்கிலும் இருந்து 789 புத்தக நிறுவனங்களின் புத்தககங்களும், 53 நாடுகளில் இருந்து 200,000 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் உள்ள புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன.
இதில் இந்தியாவிலிருந்து மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் தன்னாட்சியுடன் செயல்பட்டு வரும் தேசிய புத்தக நிறுவனம் (http://www.nbtindia.org.in/), கேரளாவைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இந்திய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
தேசிய புத்தக நிறுவனத்தின் துணை இயக்குநர் அனில் கண்ணா அவர்கள் இந்தக் கண்காட்சிக்கு இந்திய மக்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் வருகை தந்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பொழுதுபோக்கு அம்சங்கள், இலக்கியச் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இக்கண்காட்சியினையொட்டி நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment