சவூதி அரேபிய ஹஜ் அமைச்சகத்தின் அதிகாரிகள் தாயிஃப்பிலுள்ள 12 சுங்கச் சாவடிகளில் நடத்திய சோதனைகளில் ஹஜ்ஜுக்கான அரசாங்க அனுமதிபத்திரம் இன்றி மக்காவினுள் நுழையமுயன்ற 15,000 யாத்ரிகர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். இஃதன்றி, யாத்ரிகர்களை இவ்வாறு அழைத்துவந்ததாக 400 நபர்களையும் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, ஹஜ் அமைச்சகக் கூட்டம் இருவாரங்களுக்குமுன் நடந்த போது, 25 பயணிகளுக்கும் குறைவான பயணியர் இருக்கையுடைய வாகனங்கள் மக்கா நகரினுள் நுழைய தடை விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இத்தடை அக்டோபர் 23 முதல் நவம்பர் 20 வரை நடைமுறையில் இருக்கும் என்று சொல்லப்பட்டது.
உம்ரா விசாவில் வந்து அதிகக் காலம் தங்கிவிட்டவர்களைத் தேடும் பணிக்காகவும் அணிகள் அமைக்கப்பட்டுள்ளன என்று சவுதி கடவுத்துறை அதிகாரி கர்னல்.முஹம்மது அல் சாலமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் பெண் பயணிகளைப் பரிசோதிக்க பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.
Source: inneram.com
No comments:
Post a Comment