கடலூர் : வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள "கிரி' புயல் சின்னம் காரணமாக, கடலூர் மற்றும் நாகை துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கதேசத்தில், கிழக்கு வங்கக்..
கடலில் 1,500 கி.மீட்டர் தூரத்தில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால் வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த "கிரி' புயல் சின்னம் வங்கதேசம் மற்றும் மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம், கடலூர் துறைமுகங்களின் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Source: Dinamalar
No comments:
Post a Comment