Islamic Widget

October 26, 2010

பாபர் மசூதி இடிப்பு வழக்கு - நவ.18ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கை நடத்தி வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரி தத் ஷர்மா கோரியதன் பேரில், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து கூடுதல் தலைமை மாஜிஸ்ட்ரேட் நீதிபதி விஷ்ணு பிரசாத் அகர்வால் உத்தரவிட்டதாக சிபிஐ வழக்கறிஞர் கூறினார்.

இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக, 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாஜக தலைவர் எல்.கே. அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணைக்காக நீதிபதி அகர்வாலை அலாகாபத் உயர் நீதிமன்றம் நியமித்து பின் கடந்த 3 மாதங்களுக்குப் பின் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது குறிப்பிடத் தக்கது.

Source: inneram.com

No comments:

Post a Comment