அயோத்தியில் பிரச்னைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், அயோத்தி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தியில் பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரித்த நீதிபதி லிபரான் கமிஷன் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் உட்பட பலர் மீது குற்றம் சாட்டியது. பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு உ.பி. மாநிலம் பைசாபாத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடக்கிறது. இது தவிர, அயோத்தியில் பாபர் மசூதி அமைந் திருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை சமீபத்தில் முடிந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்ப்பு எந்த பக்கம் சாதகமாக இருந்தாலும் மற்றொரு பிரிவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால், தீர்ப்புக்கு பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து டெல்லியில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் உயர் நிலைக் குழுவும் கடந்த வெள்ளிக்கிழமை இது குறித்து ஆலோசனை நடத்தியது.
எனினும், கூட்டத்துக்குப் பின் பேட்டியளித்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, ‘’உணர்வுபூர்வமான பிரச்னையில் தீர்ப்பு வெளியாகும் முன்பே கருத்து கூறுவது தேவையற்றது” என்றார்.
பா.ஜ.வும் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறது. பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரான வினய் கத்யார், “உணர்வுபூர்வமான பிரச்னைகளில் அனைத்து தரப்பினரையும் ஆலோசித்து சுமூக தீர்வு காண வேண்டும். மக்களின் நம்பிக்கையை நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது. அயோத்தியில் பிரச்னைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்.தீர்ப்பு எப்படி வந்தாலும் அயோத்தியில் இருந்து ராமரை நீக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழியை காண வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அகில இந்திய பாபர் மசூதி நடவடிக்கைக் கமிட்டி தலைவர் ஜாவித் ஹபீப் கடிதம் எழுதியுள்ளார்.
பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதை தங்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ள பா.ஜ. தலைமை தயாராகி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியும் தயாராகி வருகிறது. இடதுசாரிக் கட்சிகள், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி போன்றவையும் இப்பிரச்னையில் பா.ஜ.வுக்கு எதிராக அணி திரளும் என்பதால் அயோத்தி பிரச்னை அடுத்த மாதம் விஸ்வரூபம் எடுப்பதுடன் அரசியல் களம் சூடாகும் என்று தெரிகிறது.
Source: Dinakaran
Subscribe to:
Post Comments (Atom)
- சிமி அமைப்பின் ஐவர் சிறையில் இருந்து விடுதலை
- பற்றியெறிந்த வத்தக்கரை சில video காட்சி
- (no title)
- பரங்கிப்பேட்டையின் படகு நிலையத்தின் நிலையை பாருங்கள்
- தினம் ஒரு குர்ஆன் வசனம் Inbox X
- நெல்லிக்குப்பம்:மமக வேட்பாளர்கள் நகர்மன்ற வார்டில் வெற்றி!
- காவி பயங்கரவாதம்' பற்றிய பேச்சு மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்
- கடலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது
- பெண்ணின் கருப்பையில் இருந்து 22 கிலோ கட்டி அகற்றம்
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
No comments:
Post a Comment