கடலூர் : கடலூர் மாவட்டத்தில் ஒன்றிய அளவிலான "பைக்கா' விளையாட்டுப் போட்டி இன்று (6ம் தேதி) துவங்குகிறது. இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒன்றிய அளவிலான "பைக்கா' விளையாட்டுப் போட்டிகள் இன்று 6ம் தேதி துவங்குகிறது. 6, 7 தேதிகளில் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளியிலும், 9, 10 தேதிகளில் இருப்பு அரசு மேல்நிலைப் பள்ளி, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. 11 மற்றும் 12ம் தேதிகளில் காட்டுமன்னார்கோவிலுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 13, 14 தேதிகளில் பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. 16, 17 தேதிகளில் தொழுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வடக்குப்பாளையம் தூய இருதய மேல் நிலைப் பள்ளியிலும், 18, 19 தேதிகளில் காடாம்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 19, 20 தேதிகளில் எறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. 20, 21 தேதிகளில் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 21, 22 தேதிகளில் புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் போட்டிகள் நடக்கிறது. இப்போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், போட்டி நடக்கும் பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் அல்லது ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
source: dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- ஹைதராபாத்தில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வெறியாட்டம்! ஊரடங்கு உத்தரவு!
- எல்லா மதானிக்களுக்காகவும் SDPI போராடும்- E.அபூபக்கர்
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- புனித ரமளான். ரியாத் இப்தர்
- ஆசிரியை வீட்டில் புகுந்து ரூ.1.5 லட்சம் நகை திருட்டு!
- சிதம்பரம்: பஸ் நிலைய சீரமைப்புப் பணி தொடக்கம்!
- மத்திய அரசின் முஸ்லீம்களுக்கு 4.5% உள் ஒதுக்கீட்டுக்கு தேர்தல் ஆணையம் திடீர் தடை
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- திருமணப் பதிவுச் சட்டத்தில் இருந்து விலக்கு : முஸ்லிம் லீக் கோரிக்கை
- டிரைவிங் லைசன்ஸ் கேட்டு சவுதி அரேபியாவில் பெண் வழக்கு
No comments:
Post a Comment