சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படுவதுபோல ஹிந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்காவிட்டால் ஆகஸ்ட் 16 முதல் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படுவதுபோல ஹிந்து மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்லி உதவித் தொகை வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் 35 இடங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கடந்த ஜூலை 25-ம் தேதி நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 1.25 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் 2.30 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
மத பாகுபாடு இல்லாமல் ஹிந்து மத மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்காவிட்டால் ஆகஸ்ட் 16 முதல் மாநிலம் முழுவதும் மாணவர்களைத் திரட்டி போராடுவோம். முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் தமிழர் பகுதிகளில் நடைபெறும் மறுவாழ்வு பணிகளை பார்வையிட இந்தியாவில் இருந்து பிரதிநிதி ஒருவர் அனுப்பப்படுவார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், ராஜபட்சவின் கோரிக்கையை ஏற்றுதான் பிரதிநிதியை இந்தியா அனுப்ப உள்ளது என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதில் எது உண்மை? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். ராஜபட்சவுக்கு உலக அரங்கில் மரியாதையை ஏற்படுத்துவதற்காக இந்திய அரசு பிரதிநிதியை அனுப்புகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காமன்வெல்த் போட்டியில் ரூ. 2,500 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதனால் இந்தியாவில் போட்டிகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஊழல் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
காங்கிரஸ் கட்சி சி.பி.ஐ. அமைப்பை தவறாக பயன்படுத்தி வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. கட்டுக்குள் வைத்திருப்பதுபோல சி.பி.ஐ. இந்திய அரசை கட்டுக்குள் கொண்டுவந்துவிடும். இது மிகவும் ஆபத்தானது என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

No comments:
Post a Comment