Islamic Widget

August 06, 2010

ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு வசதி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

சிதம்பரம் : சிதம்பரம் நகர மேம்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. சிதம்பரம் நகரத்தை மேம்படுத்தி, பராமரிப் பது குறித்து அதிகாரிகள் மற் றும் மக்கள் பிரதி நிதிகளுடன் ஆலோசனைக் கூட் டம் சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. கலெக் டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன், திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, சிதம்பரம் ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மாரியப்பன், டி.எஸ்.பி., மூவேந்தன், மின்துறை செயற்பொறியாளர் செல்வசேகர், அண் ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி, நகராட்சி சேர்மன் பவுஜியாபேகம், ஊராட்சித்தலைவர்கள் வேணுகோபால், தனலட்சுமி ரவி, ராஜேந்திரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ் பெக்டர் கண்ணபிரான் உள் ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கே ற்றனர். கூட்டத்தில் ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு வசதி அமைப்பது குறித் தும், நடராஜர் கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதி சாலைகளை சரி செய்வது, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது, பொதுக் கழிப்பிடத்தை தூய்மையாக வைத்திருப்பது, நகரில் தெரு விளக்கை பாதுகாப்பது, பழுதடைந்துள்ள சாலையை சரிசெய்வது, பொது சுகாதாரம் மற்றும் பஸ் நிலையம் பராமரிப்பது குறித்து ஆலோசிக் கப்பட்டது. கூட்டத்தில் பொதுப் பணி, நெடுஞ்சாலை, விவசாயத் துறைகள் மற்றும் பிரத்துறை அதிகாரிகள், அரிமா, ரோட்டரி சங்க நிர் வாகிகள் பங்கேற்றனர்.
source: dinamalar

No comments:

Post a Comment