பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தப்படாததால் பாழாகி வருகிறது.பரங்கிப்பேட்டை வண்டிக்காரத் தெருவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அரசு பெண்கள் பள்ளி இயங்கி வந்தது. மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் போதிய இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக் கப்பட்டு வந்தனர்.இந்நிலையில் சுனாமிக் குப் பின் ராஜஸ்தான் மாநில அரசால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே 6 ஏக்கரில் நிலம் வாங்கப்பட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய பள்ளி கட்டடம் கட்டப் பட்டது. இதனையடுத்து புதிய பள்ளிக் கட்டடத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாற்றம் செய்யப்பட்டது. அதனால் வண் டிக்காரத் தெருவில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டடங்கள் பயன்படுத்தப்படாமல் மூடப் பட்டது. அந்த பள்ளிக் கட்டடத்தில் வருவாய் அலுவலகம், பரங்கிப்பேட்டை ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், கச்சேரி தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக் கப் பள்ளி ஆகியவைகள் கொண்டுவர பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் முந்தைய கலெக்டர் ராஜேந்திர ரத்னுவிடம் கோரிக்கை வைத்தார்.அதையடுத்து கலெக் டர் ராஜேந்திர ரத்னு, கட் டடத்தை பார்வையிட்டு அரசு அலுவலங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார். ஆனால் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஐந்து ஆண்டுகளாக பெண்கள் பள்ளிக் கட்டடங்கள் பாழாகி வருகிறது.பரங்கிப்பேட்டையில் உள்ள வருவாய் அலுவலகம் சேதமடைந்துள்ளாதால் கிராம நிர்வாக அலுவலகத்திலேயே வருவாய் அலுவலகம் உள்ளது. மேலும் நூலகம் உள் ளிட்ட அலுவலகங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகிறது.இப்படி பல அலுவலங் கள் இடமின்றி வாடகை கட்டத்திலும், பழமையான கட்டடங்களிலும் செயல்பட்டு வரும் நிலையில் அரசுக்கு இழப்பு ஏற் பட்டு வருகிறது. இதனை தவிர்க்க பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பள்ளிக் கட்டடங்களை புதுப் பித்து வருவாய் அலுவலகம், நூலகம் மற்றும் தொடக் கப் பள்ளி கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
நன்றி தினமலர்
No comments:
Post a Comment