Islamic Widget

July 21, 2010

வீரப்பன் தேடுதல் வேட்டையில் முக்கிய பங்கு வகித்த மாவீரன் சுல்தான் மரணம்!


வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையில் சேலம் பொலிஸ் பிரிவில் சுல்தானும் இணைந்து பணியாற்றி வந்தான்.

காடுகளில் வீரப்பனை தேடி கண்டுபிடிக்கும் பணியில் கடுமையாக செயற்பட்டு வந்தான்.


காடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளனரா? ஆட்கள் தங்கி உள்ளனரா? என்று இந்த சுல்தான் கண்டுபிடிப்பு பணியில் ஈடுபட்டு வந்தான்.

வீரப்பன் சுட்டு கொல்லப்பட்ட பின்பு இந்த சுல்தான் மேட்டூர் அதிரடிப்படை வீரர்களிடம் சேர்ந்து கொண்டான். இந்த நிலையில் சுல்தானுக்கு கடந்த 7 மாதத்திற்கு முன்பு ஓய்வு தரப்பட்டது.

இதன் பின்னரும் சுல்தான் மேட்டூர் அதிரடிப்படை வீரர்கள் சேர்ந்து பணியாற்றி வந்தான். சில நாட்களுக்கு முன்பு சுல்தானுக்கு உடல் நிலை பாதித்தது. இதனால் அவனை நாமக்கல்லில் உள்ள மருத்துவமனையொன்றில் சக பொலிஸார் அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

அப்போது சுல்தானின் கிட்னியில் கல் இருப்பது தெரிய வந்தது. பின்னர் சுல்தானுக்கு அறுவைச்சிகிச்சை மூலம் அது சரி செய்யப்பட்டது. பின்னர் மேட்டூரில் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் உடல்நிலை சரியாக வில்லை.

மீண்டும் அவனுக்கு வைத்தியர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுல்தான் இறந்து விட்டான். அதிரடிப்படை வீரர்களும் சுல்தானுக்கு இறுதி மரியாதை செய்தனர்.

இந்த இறுதி மரியாதையின் போது பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். வீரப்பன் வேட்டையின் போது ஏராளமான வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து உதவியதால் அவனது உடல் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment