கடலூர், ஜூலை 20: போலீஸôர் கைப்பற்றிய நாட்டு வெடிகுண்டுகள் செவ்வாய்க்கிழமை செயல் இழக்கச் செய்யப்பட்டன.
÷கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்பு உள்ளவர் மேலக்குப்பம் சங்கர் (32). இவரை அண்மையில் போலீஸôர் மடக்கிப் பிடித்தனர். தப்பியோட முயன்றபோது அவரது வலது கால் முறிந்ததாகப் போலீஸôர் தெரிவித்தனர். தற்போது அவர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
÷கைதானபோது அவரிடம் இருந்து 3 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்த அந்த வெடிகுண்டுகளை செயல் இழக்கச்செய்ய, நீதிமன்றத்தில் அனுமதி கோரி இருந்தனர். நீதிமன்ற அனுமதியுடன் வெடிகுண்டுகளை போலீஸôர் செவ்வாய்க்கிழமை செயல் இழக்கச் செய்தனர்.
÷ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பெண்ணை ஆற்றில் பள்ளம் தோண்டி அவற்றை வெடிக்கச் செய்தனர். வெடிகுண்டுகள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததை வெகுதூரம் வரை கேட்க முடிந்தது.
÷இதனால் அந்தப் பகுதி, புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. வெடிகுண்டுகளின் திறன் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று போலீஸôர் தெரிவித்தனர்.
மாவட்ட செய்திகள
Source: dinamani
Subscribe to:
Post Comments (Atom)
- சிமி அமைப்பின் ஐவர் சிறையில் இருந்து விடுதலை
- பற்றியெறிந்த வத்தக்கரை சில video காட்சி
- (no title)
- பரங்கிப்பேட்டையின் படகு நிலையத்தின் நிலையை பாருங்கள்
- தினம் ஒரு குர்ஆன் வசனம் Inbox X
- நெல்லிக்குப்பம்:மமக வேட்பாளர்கள் நகர்மன்ற வார்டில் வெற்றி!
- காவி பயங்கரவாதம்' பற்றிய பேச்சு மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்
- கடலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது
- பெண்ணின் கருப்பையில் இருந்து 22 கிலோ கட்டி அகற்றம்
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
No comments:
Post a Comment