Islamic Widget

March 10, 2012

சவூதி வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவிப்பு!

ரியாத்: இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான புதிய பாஸ்போர்ட் சட்டம் அமலுக்கு வந்துள்ளது என்று ரியாத் இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளயாவது, வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும் புதிய தொழில்நுட்ப முறைகளில் ஒன்றான பார் கோட் (Bar code) ரீடிங் முறையில் புதிய தொழிlநுட்பத்துடன் உலகளவில் பல நாடுகளில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பார்கோட் இல்லாத பாஸ்போர்ட்டுகளில் ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் செல்பவர்களுக்கு சிரமங்கள் இருப்பதாகவும் மேலும் அந்நாடுகளில் பார் கோட் இல்லாத பாஸ்போர்ட்களை அனுமதிப்பதில்லை என்ற பிரச்சனை எழுவதாகவும் கூறிய அதிகாரிகள் அதிகமான நாடுகளில் பார் கோட் நடைமுறைக்கு வந்து விட்டதால் சவூதியில் வசிக்கும் இந்தியர்களும் தங்களது பாஸ்போர்ட்களை புதிய பார் கோட் முறைக்கு மாற்றிக் கொள்ளும்படி இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
எனவே சவூதி வாழ் இந்தியர்கள், இப்புதிய சட்டத்தின்படி பார் கோடு உள்ள பாஸ்போர்ட் இல்லாதவர்கள் பிறநாடுகள் பயணிப்பதற்கு முன் இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு புதிய சட்டதிட்டங்களின் படி தங்களது பாஸ்போர்ட்களை மாற்றிக்கொள்ளும்படியும் அறிவுறுத்தபட்டுள்ளது..

No comments:

Post a Comment