Islamic Widget

September 18, 2011

பரங்கிப்பேட்டை : உள்ளாட்சித் தேர்தல் பணி தீவிரம்

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஓட்டுச் சாவடிகளில் அடையாள எண் போடும் பணி நடந்து வருகிறது.உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபர் 24ம்தேதியுடன் முடிவடைகிறது. உள்ளாட்சித்தேர்தலுக்கானதேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகளை பிடிக்க நகர பகுதிகளைவிட கிராம மக்களிடையே அதிக போட்டி நிலவுகிறது.இதற்கிடையே தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது ஊராட்சி ஒன்றியத்தில் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.ஓட்டுச் சாவடி அலுவலர் நியமனம், ஓட்டுச் சாவடியில் அடையாள எண்போடுவது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகளை தேர்தல் அதிகாரிகள் துரைசாமி, ராஜாராம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment