Islamic Widget

April 28, 2011

ரியாத் : 770,000 வேலைவாய்ப்புகள், 550,000 வீடுகள்

ரியாத் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ள ஒரு தகவல்படி அடுத்த 20 ஆண்டுகளில் 770,000 புதிய வேலை வாய்ப்புகளும், 550,000 வீடுகளும் மண்ணின் மைந்தர்களுக்காக உருவாக்கப்படும் என்று தெரிகிறது.

ரியாத் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், திட்டக்குழுவின் உயர் செயலாண்மைக்குழுவினருடன் இணைந்து நடத்திய கூட்டத்தில் இம்முடிவு எட்டப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டத்திற்கு ரியாத் பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின் தலைவரும், ரியாத் மாகாண ஆளுநருமான இளவரசர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் தலைமைத் தாங்கினார்.மேலும் பல சுகாதாரத் திட்டங்களும், வெள்ளத் தடுப்பு, வடிகால் வசதி,புதிய சாலைகள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டப்பணிகளும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக பொறியாளர் இப்றாஹிம் முஹம்மது அல்சுல்தான் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment