Islamic Widget

March 15, 2011

சென்னையில் சிதம்பரம் தொகுதி நிர்வாகிகள் அடம்

பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதியில் உள்ள தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் சீட்டு பெற்றுக் கொண்டுதான் வருவோம் என சென்னையில் முகாமிட்டுள்ளனர்.சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., நேரடி போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க., 31 பேர் நேர்காணலுக்கு சென்றனர்.
 யாருக்கு சீட்டு என்பது முதல்வர் அறிவிப்பார் என துணை முதல்வர் ஸ்டாலின் கூறியதால் முக்கிய நிர்வாகிகளை தவிர மற்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர்.கடந்த மூன்று நாட்களாக முக்கிய நிர்வாகிகள் சிலர் சீட்டை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதற்காக சென்னையிலேயே முகாமிட்டு தங்களது ஆதரவு தலைவர்கள் மூலம் காய் நகர்த்தி வருகின்றனர்.
அ.தி.மு.க.,வில் சிட்டிங் எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சீட்டு கேட்டு மனு கொடுத்துள்ளனர். எந்த நேரத்திலும் ஜெயலலிதா தங்களை அழைப்பார் என்ற நம்பிக்கையில் இவர்களும் சென்னையிலேயே முகாமிட்டுள்ளனர்.தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் சென்னையிலேயே முகாமிட்டுள்ளதால் சிதம்பரம் அரசியல் பரபரப்பு இல்லாமல் உள்ளது.

Source: Dinamalar

No comments:

Post a Comment