Islamic Widget

February 18, 2011

சவூதி: "சினிமா தேவை" என்கிறார் உயர் அதிகாரி

திரை கடலோடி திரவியம் திரட்டுபவர்களால் நிரம்பியிருக்கும் நாடாக இருக்கும் சவூதி அரேபியா, திரை அரங்குகளே இல்லாத நாடாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று.முதன்முறையாக, இப்போது சவூதி அரேபியாவில் திரைப்படங்கள் காண்பிக்கப்படலாம், தவறில்லை எனும் தொனியில் அரசின் உயர் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அரபுப் பத்திரிக்கையான அல்-ஹயாத் செய்தி வெளியிட்டுள்ளது.அதன்படி, ரியாத் நகர மேயர் டாக்டர். அப்துல் அஸீஸ் பின் அயாத் என்பவரே அப்படி ஒரு கோரிக்கையை முன்னெடுத்துள்ளார். டாக்டர். அப்துல் அஸீஸ் சவூதியின் சுற்றுலா மேம்பாட்டுக்கழகத் தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரியாத் சேம்பர் ஆப் காமர்ஸில் நடைபெற்ற விழாவொன்றில் அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
"நம்முடைய கலாச்சாரம் மற்றும் செய்தி தொடர்புத் துறையின் கண்காணிப்பின் கீழ் சினிமாப் படங்களைத் திரையிடலாம்" என்றார் அப்துல் அஸீஸ். அவர் மேலும் கூறுகையில், "பஹ்ரைனிலா, ரியாத்திலா என்பதுவா இதில் பிரச்னை?", அதில் ஒரு வித்தியாசமமுமில்லையே" என்று கேட்டார்.அதிகார மட்டத்தின் மற்ற செல்வாக்கு நிலைகளில் (இந்தக் கருத்திற்கு) மாறான கருத்தே காணப்படுகிறது என்று அல்ஹயாத் நாளிதழ் தெரிவிக்கிறது.பொதுவாக, சவூதியில் பொதுத் திரையரங்குகளே இல்லை என்றபோதிலும், பல நாடுகளின் தூதரகங்க்ளிலும், துணைத் தூதரகங்களிலும் திரைப்பட விழாக்கள் நடத்தப்படவே செய்கின்றன. இந்நிலையில், புதனன்று துறைமுக நகரான ஜெத்தாவில் நான்காவது ஆசியத் திரைப்பா விழா தொடங்கியுள்ளது. அதுபோலவே, நாளை முதல் ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகத்தின் அரங்கில் "உலகத் திரைப்படங்கள் விழா - தூதுவரின் தேர்வில்" என்ற தலைப்பில் சினிமா விழாவொன்று திரை விரிய இருக்கிறது.

No comments:

Post a Comment