நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் முஸ்லிம் ஐக்கிய மஜ்லிஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். நெல்லிக்குப்பத்தில் வசிக்கும் முஸ்லிம் சமுதாயம் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் அனைத்து தரப்பு மக்களிடமும் சமூக நல்லிணக்கம் ஏற்படுத்திட சமுதாய ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அனைத்து ஜமாத்தினர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் பங்கேற்றனர். சமுதாய ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், கல்வி, முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டது. முஸ்லிம் ஐக்கிய மஜ்லிஸ் கூட்டமைப்பின் தலைவராக ஷேக் தாவூத், செயலராக இலாவுதீன், பொருளாளராக அபுசாலி, துணைத் தலைவர்களாக முஷ்டாக் அலி, துணை செயலர்களாக கவுன்சிலர் அசன்அலி, முகமது பாரூக், அன்சாரி, உபைதுர் ரஹ்மான், அப்துல் ரஹ்மான், நஜிர் அகமது தேர்வு செய்யப்பட்டனர்.
source: dinamalar
No comments:
Post a Comment