வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பரங்கிப்பேட்டை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இப்பகுதியில் உள்ள சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கடலில் ராட்சத அலைகள் எழுந்தது.
இதற்கிடையே புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராஜி(35) என்பவர், கடல் ஓரத்தில் உள்ள படகை கரைக்கு கொண்டு செல்ல முயன்றார். அப்போது திடீரென படகு அவர் மீது கவிழ்ந்தது.
இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் கடலோர கிராமங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு, பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்தனர்.
November 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பின்லேடன் பற்றி தகவல் தந்த டாக்டரை மன்னிக்க வேண்டும்
- அல் ரைப் சிக்கன் சென்ட்டர்
- இறப்புச் செய்தி
- தேர்தல் விதி மீறல் - தவ்ஹீத் ஜமாத் மீது வழக்கு
- நபிகள் நாயகம் பிறந்த நாள் மதுபான கடைகள் மூட உத்தரவு
- புதுவை, கடலூர் மாவட்டத்தை கோரத்தாண்டவமாடிய "தானே'' புயல்
- எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல – திக்விஜய் சிங்
- எகிப்து அதிபர் தேர்தல்: இஃவான் வேட்பாளர் முர்ஸி முன்னணி!
- சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்
- கடலூரில் 1 லிட்டர் மண்ணெண்ணை 60 ரூபாய்க்கு விற்பனை: மெழுகுவர்த்தியும் கிடைக்கவில்லை

No comments:
Post a Comment