சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 78வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா பட்டம் வழங்கினார்.
பட்டமளிப்பு விழா, சாஸ்திரி அரங்கில் நேற்று நடந்தது. கவர்னரும் பல்கலைக் கழக வேந் தருமான சுர்ஜித்சிங் பர்னாலா தலைமை தாங்கி மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங் கினார். துணைவேந்தர் ராமநாதன் ஆண்டறிக்கை வாசித்தார். பிஎச்.டி., 152 பேருக்கும், எம்.பில்., 63 பேருக்கும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 20 பேருக்கு தங்கப் பதக்கம், 120 மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.
2009-10ம் கல்வியாண்டில் நேரடியாக படித்த, 6,303 மாணவ, மாணவியர், தொலை தூரக்கல்வி மூலம் படித்த, 99 ஆயிரத்து 573 என மொத்தம் ஒரு லட்சத்து 5,876 பேர் பட்டம் பெற்றனர். கவர்னர் பட்டம் வழங்கியது போக மற்றவர் களுக்கு கவர்னர் அனுமதியுடன் அனுப்பி வைக்கப்படும்.
டில்லி தேசிய ஆசிரியர் கல்விக்குழு தலைவர் முகமது அக்தர் சித்திக், பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழக இணை வேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி மற்றும் செனட், சிண்டிகேட் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர் முகமது அக்தர் சித்திக் பெயரில், 50 ஆயிரம் ரூபாய் நிதியில் அறக் கட்டளையை எம்.ஏ.எம்.ராமசாமி துவக்கி வைத்தார். காலை 11 மணிக்கு துவங்கிய பட்ட மளிப்பு விழா, 12.20 மணிக்கு நிறைவடைந்தது.
Source: Dinamalar
October 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பரங்கிப்பேட்டையில் வத்தக்கரை எரிந்து சாம்பல்லனாது
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- இறப்புச் செய்தி
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- தொழிற்சாலையில் தீ : இந்தியர் உட்பட 11 பேர் பலி
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத் தலைவரின் மகள் வஃபாத் / Condolence Message from K-Tic
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!
No comments:
Post a Comment