கடந்த ஒருவாரமாக சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பால்தாக்கரே இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
மும்பை இனக் கலவரத்திற்கு
காரணமான இவர் மராட்டிய மாநிலம் மராட்டியர்களுக்கே சொந்தம் என்று கூறி தமிழர்கள்
மற்றும் வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்த காரணகர்த்தாவாக திகழ்ந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.
இவரின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற
பத்திரிக்கையாளர்கள் மீது சிவசேனை குண்டர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பால்தாக்கரேவின் மரணத்தை தொடர்ந்து மும்பை மாநகரில் சுமார் 7 ஆயிரம் போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment