Islamic Widget

August 24, 2012

கடலூர் ;சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது 3 பேர் உடல் கருகினர்

கடலூரில் சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது 3 பேர் உடல் கருகினர்கடலூர் முதுநகரை அடுத்த அலக்கரையை சேர்ந்தவர்கள் பாலு (வயது 49), மணி (60), விநாயகமூர்த்தி. நேற்று அந்த பகுதிகளில் சென்ற சவ ஊர்வலத்தில் இவர்கள் 3 பேரும் கலந்து கொண்டனர். அந்த ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. சில பட்டாசுகள் திசை திரும்பி தவறாக சென்றதால் பாலு, மணி, விநாயகமமூர்த்தி ஆகியோர் உடல் கருகி படுகாயமடைந்தனர்.

உடனே அந்தசவ ஊர்வலத்தில் சென்ற பிறர் அந்த 3 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 3 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

No comments:

Post a Comment