தமிழகத்தில்
கடந்த சில ஆண்டுகளாக மின்தடை அமலில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக காற்றாலை
மின்சார உற்பத்தி குறைந்ததால் மின்சப்ளை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர்
மாவட்டத்தில் சமீப காலமாக தினமும் 4 அல்லது 5 மணி நேரம் மின்தடை இருந்து வந்தது.
ஆனால் கடந்த 3 நாட்களாக கடலூர், நெல்லிக்குப்பம், நெய்வேலி, பண்ருட்டி உள்பட
மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சுமார் 12 மணி நேர மின்சார வினியோகம்
துண்டிக்கப்பட்டுள்ளது. இரவில் 4 முறை மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், குறிப்பாக
குழந்தைகள் தூக்கமின்றி அவதியடைந்தனர்.
விழுப்புரம்
மாவட்டத்தில் ஏற்கனவே 5 அல்லது 6 மணி நேரம் மின்தடை நடைமுறைப்
படுத்தப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக தினமும் 12 மணி நேரம் மின்சார
வினியோகம் தடை செய்யப்பட்டது.
இரவில்
மட்டும் சுமார் 5 மணி நேரம் மின் சப்ளை பாதிக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் முதல்
முதியோர்கள் வரை அனைவரும் அவதிப்பட்டனர்.
No comments:
Post a Comment