பரங்கிப்பேட்டையில் "தானே' புயலின்போது கீழே சாய்ந்த மீனவர்களின் மானிய விலை டீசல் பங்க் அலுவலக ஷெட் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது.
பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் மீனவர்களுக்கு மானிய விலை டீசல் பங்க் உள்ளது. இதன் மூலம் பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள புதுக்குப்பம், புதுப்பேட்டை, சின்னூர், சாமியார்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் வீசிய "தானே' புயலின் போது டீசல் பங்க் அலுவலக ஷெட் சேதமடைந்தது. சேதமடைந்த அலுவலக ஷெட்டை சீரமைக்காததால் டீசல் பங்க் அலுவலக ஊழியர்கள் மரத்தடி நிழலில் உட்கார்ந்து பணி செய்து வருகின்றனர். இதனால் டீசல் விற்பனை பணம், அலுவலக பதிவேடுகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.
எனவே டீசல் பங்க் அலுவலக ஷெட்டை சீரமைக்க வேண்டும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment